பிரசவத்திற்கு பின்பு உடல் எடை அதிகரித்து விட்டதா? இது உங்களுக்கான டிப்ஸ்!
பொதுவாக பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
இவ்வாறு அதிகரிக்கும் போது சிலர் மாத்திரமே உடல் எடையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்பார்கள், சிலர் குழந்தையை பராமரிப்பதிலே நேரத்தை செலவிடுவார்கள்.
அந்த வகையில் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது தொடர்பில் தெரிந்துக்கொள்வோம்.
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்?
பிரசவத்திற்கு பிறகு தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், அதாவது சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சை முறை பிரசவமாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்வது சிறந்தது இதனால் உடல் எடையை குறைக்கலாம்.
குழந்தைக்கு முறையாக தாய்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
உடல் எடையை அதிகரிக்க கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும். தமது உடல் எடையை குறைக்கும் போது உணவுகள் மீது அதிக கவனம் இருக்க வேண்டும்.
திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமல்ல. இவை உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை. எனவே எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கான சிறந்த தீர்வு திரவ ஆகாரங்கள் எனலாம்.
மேலும் ஆரோக்கியமான உணவு முறை, தாய்ப்பால் புகட்டுதல், ஆரோக்கியமான மனநிலை இதையெல்லாம் கவனித்து செலுத்தி வந்தால் உடல் எடை விரைவாக குறையும்.