ஒரு ஆட்டோவுக்குள் இவ்வளவு பேரா? ஷாக்கான போலீஸ்...தீயாய் பரவும் வீடியோ
உத்திர பிரதேசத்தில் அதிகமான நபர்களுடன் பயணித்த ஆட்டோவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்திர பிரதேசத்தின் பதேப்பூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

மத்திய உத்திர பிரதேசத்தில் உள்ள பிந்த்கி கோட்வாலி பகுதியில் வழக்கம்போல காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, ஆட்டோவில் அதிகமான நபர்களை ஒருவர் ஏற்றிவருவதை போலீசார் பார்த்துள்ளனர்.
#WATCH In this auto rickshaw of #Fatehpur, 27 people including the driver had gone to offer prayers for #Bakrid.
— KafirOphobia (@socialgreek1) July 10, 2022
One by one the police counted twenty-seven people including children and brought them down.#UttarPradesh pic.twitter.com/CfjPotBsJ0
மேலும், அந்த ஆட்டோ அதிவேகத்தில் பயணித்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் கீழே இறங்க சொன்னதும், ஆட்டோவில் அமர்ந்திருந்த 27 பேரும் கீழே இறங்கியுள்ளனர்.
இதனை பார்த்த போலீஸ் அதிகாரிகள் ஷாக்கில் மூழ்கியுள்ளனர்.