நாஞ்சில் ஆள் வைத்து மிரட்டுகின்றார்! அழுதப்படி திருநங்கை பரபரப்பு குற்றச்சாட்டு : வீடியோ வைரல்
திருநங்கை வைஷுலிசா மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில், நாஞ்சில் விஜயன் தன்னை அச்சுறுத்துவதாக கதறி அழுதபடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
நாஞ்சில் விஜயன் - திருநங்கை சர்ச்சை
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார், மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன். என திருநங்கை வைஷுலிசா நாஞ்சில் மீது கடந்த ஆண்டில் புகார் கொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன் “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு இல்லை என மனைவியை ஆதாரமாக நிறுத்து ஒரு காணொளியை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.
இந்த காணொளிக்கு பதில் கொடுக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா தன்னிடம் வாங்கிய பணத்தை மனசாட்சியிருந்தால் திருப்பி கொடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் பற்றியும் கேள்வி எழுப்பி ஒரு காணொளியை வெளியிட்டர்.

குறித்த பிரச்சினை இணையத்தில் பொது பிரச்சினையாக மாறி அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
அதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயன், உங்கள் பயணத்தை நீங்கள் தொடருங்கள்.எனக்கு குடும்பம், குழந்தைகள் இருக்கின்றன ஒருவேளை நான் உங்கள் மனதைக் காயப்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார்.

அதனை தொடர்ந்து இந்த பிரச்சினை சற்று ஓந்தது. இருப்பினும் அவ்வப்போது நாஞ்சில் விஜயன் திருமண வாழ்க்கையை குழப்பும் வகையில், வைஷு புகைப்படங்களை பதிவிடுதும், பிறந்தநாள் வாழ்த்து சொல்வதும் என சென்றுக்கொண்டு இருந்தது.

இந்நிலையில், நாஞ்சில் விஜயன் ஆள் வைத்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படுகின்றார் என குற்றம் சாட்டி, கண்ணீர் விட்டு அழுதப்படி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.
மேலும் குறித்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் உலகமாக நடிப்புடா சாமி.. என வைஷுவை விளாசி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |