நடிகையாகும் தேவயானியின் மகள் பிரியங்கா.. வெளியிட்ட போட்டோஷுட்டைப் பாருங்க
நடிகை தேவயானியின் இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ள நிலையில், இவரது புகைப்பட தொகுப்பு வெளியாகியுள்ளது.
நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் தான் நடிகை தேவயானி. இவர் இயக்குனர் ராஜகுமாரனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில் வீட்டைவிட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகள் பாடகியாக கலக்கி வரும் நிலையில், தற்போது இளைய மகள் பிரியங்கா படத்தில் அறிமுகம் ஆக உள்ளார்.
திருமணத்திற்கு பின்பு நடிகை தேவயானி குடும்பத்தை பார்த்துக் கொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்துள்ளார். ஆனால் சின்னத்திரையில் அவ்வப்போது தலைகாட்டி வருகின்றார்.

பிரியங்காவின் புகைப்படம்
இந்நிலையில் தேவயானியின் இளைய மகள் பிரியங்கா ரஞ்ஜன் தி அட்வகேட் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் பிரசாந்த்தும் நடிக்கின்றார்.
மேலும் இப்படத்தினை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகின்றார். தெலுங்கில் வெற்றி பெற்ற படமான இப்படத்தினை தமிழில் ரீமேக் செய்வதாக பிரசாந்தின் தந்தை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா ராஜகுமாரனின் தற்போதைய புகைப்பட தொகுப்பு இணையத்தில் வைரலாகி வருகின்றது.





| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |