ட்ரோல் செய்த நெட்டிசன்கள் வாயை திறக்க முடியாமல் அடைத்த தொகுப்பாளர்!
லியோ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோக்காட்சியை வெளியிட்ட ரம்யா அதன் மூலம் ஒரு சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளார்.
ரம்யா சுப்ரமணியன்
பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் ரம்யா சுப்ரமணியன்.
இவர் மீடியாவை தாண்டி தற்போது வெள்ளத்திரையிலும் கால்பதித்து விட்டார்.
இந்த நிலையில் டிடிக்கு நயன்தாரா எப்படியோ அப்படி தான் சமந்தாவிற்கு ரம்யா.
இவர்களின் நட்பை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்துவார்கள்.
ஜாதி சர்ச்சைக்கு தரமான அடிக் கொடுத்த ரம்யா
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அவருடைய டுவிட்டர் பக்கத்தில் விஜய்யின் லியோ பட பாடலான 'நான் வரவா' பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் "classi-fy" என்ற வார்த்தையை குறிப்பிட்டு இருந்தார். இதனை கவனித்த இணையவாசிகள் "குத்து என்றால் low class, பரதநாட்டியம் என்றால் high class" என ஜாதி ரீதியாக பிரித்து பேசுகிறார் என்ற சர்ச்சை கிளப்பியுள்ளார்கள்.
Why is this only "class" and not Kuthu?
— Sukanya L.N. (@sulakshna7783) July 11, 2023
Very casteist.
இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக "மக்கள் என்னை பற்றி பல விதத்தில் நினைத்தாலும் அதை பற்றி கவலையில்லை.
என்னை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது தான் முக்கியம்" என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்கள் அவர்களின் வாயை சிப் போட்டு முடியது போல் முடிக் கொண்டார்கள்.
— Ramya Subramanian (@actorramya) July 11, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |