பெயருக்கு பின்னால் இருந்த ஜாதியை தூக்கிய எறிந்த நடிகை ஜனனி.. உண்மை காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அவன்-இவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதை தொடர்ந்து பாகன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து, தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜனனி அய்யர் தனது பெயரில் உள்ள ஜாதி அடையாளத்தை நீக்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
அதில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன்” என குறிப்பிட்டுள்ள ஒரு பதிவை வெளியிட்டு அதில் அவர் தனது பெயரை ஜனனி என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனனியின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஜனனி வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.