மீண்டும் ரீ என்ரி கொடுக்கும் மணிமேகலை: ஆனால் கோமாளியாக இல்லை...
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருந்த மணிமேகலை மீண்டும் நிகழ்ச்சியில் ரீஎன்ரி கொடுத்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மணிமேகலைக்கு பெரும் ஆராவாரம் செய்து வருகின்றனர்.
மணிமேகலை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீனனும் சிறப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நான்கு சீசனிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர்.
இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து விட்டார்.
இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், மதம் மாறி விட்டதாகவும் பல வதந்திகள் பரவி வந்தது ஆனால் இது குறித்த எந்த தகவலையும் அவர் வெளியிட வில்லை. மேலும், நிகழ்ச்சியில் இருந்து விலகி புது வீடு கட்டுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மீண்டும் குக் வித் கோமாளி
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கோமாளியாக வெளியில் சென்று மீண்டும் தொகுப்பாளினியாக நிகழ்ச்சிக்குள் நுழைந்திருக்கிறார் .
இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டிருந்தனர். இதில் ரக்ஷனுடன் இணைந்து தொகுப்பாளராக மீண்டும் இணைந்திருக்கிறார்.