இரண்டாவது திருமணம் பற்றி பேசிய வி.ஜே மகேஸ்வரி.. தரமான ரிப்ளை கொடுத்த மகன்
வி,ஜே மகேஸ்வரியின் மகன் அம்மா குறித்து பேசியதற்கு தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
வி.ஜே மகேஸ்வரி
பிரபல தொலைக்காட்சியில் பணிப்புரியும் தொகுப்பாளர்களில் வி.ஜே மகேஸ்வரியும் ஒருவர்.
இவர் ஆரம்பகாலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் காலங்கள் செல்ல செல்ல சின்னத்திரை, சினிமா படங்கள் என பிரபலமாகி விட்டார்.
தற்போது 36 வயதாகும் வி.ஜே மகேஸ்வரி திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார்.
டைட்டில் கிடைக்காவிட்டாலும் வீட்டில் நடந்த சில பிரச்சினைகளில் நுழைந்து கடுமையான விமர்சனத்தை பெற்றார்.
இரண்டாவது திருமணம்
மகனுக்காக தனிமையில் வாழ்ந்து வரும் வி.ஜே மகேஸ்வரி தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.
அதில், “ எனக்கும் நிறைய தேவைகள் இருக்கிறது. ஆனால் என்னை திருமணம் செய்து கொள்பவர் என் மகனுக்கு சிறந்த அப்பவாக இருப்பரா? என்ற பயம் இருக்கிறது. என்னை திருமணம் செய்துக் கொள்வதாக இரண்டு நபர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் எனக்குள் ஒரு பயம் இருக்கிறது..” என கவலையாக பேசியிருக்கிறார்.
மகன் கொடுத்த ரிப்ளை
இதனை தொடர்ந்து மகனுடன் பிரபல ஊடகமொன்றிற்கு வி.ஜே மகேஸ்வரி பேட்டிக் கொடுத்துள்ளார்.
அப்போது, வி.ஜே மகேஸ்வரி குறித்து பல கேள்விகள் மகனிடம் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த வி.ஜே மகேஸ்வரியின் மகன் கேசவ் “ அம்மா பற்றி தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த போது நான் பார்த்து விட்டு மிகவும் வறுந்தினேன்.
பின்னர் நாளடைவில் கமெண்ட்டுகளை பார்ப்பதை விட்டு விட்டேன். என்னுடைய பாட்டி ஒரு நாள் பார்த்து விட்டு கூறிய போதும் அவற்றை இனி பார்க்க வேண்டாம் என கூறினேன்.” என கூறியிருக்கிறார்.
இவருடைய இந்த பதில் வி.ஜே மகேஸ்வரியை விமர்சிப்பவர்களுக்கு தரமான பதிலடியாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |