Chanakya Niti: காலையில் எழுந்ததும் எந்தெந்த விடயத்தை பார்க்கக்கூடாது?
Morning Wake up Chanakya Niti: சாணக்கிய நீதியின் படி காலையில் எழுந்ததும் பார்க்கக்கூடாத விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சாணக்கிய நீதி
சாணக்கியர் கி.மு.300ம் காலக்கட்டத்தில் வாழ்ந்த தத்துவவாதி, பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர்ஈ ஆசிரியர், எழுத்தாளர் என்று பல பரிமானங்களைக் கொண்டவர் ஆவார்.
இவர் கூறிய சில பொன்மொழிகள் தான் சாணக்கியரின் நீதி என்று அழைக்கப்படுகின்றது. அதாவது இந்த நீதியின் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவத்தினையும் குறித்து தத்துவங்களை விரிவாக கூறியுள்ளார்.
அந்த வகையில் காலையில் எழுந்து எந்தெந்த விடயங்களை பார்க்கக்கூடாது என்பதை சாணக்கிய நீதி கூறுவதை தெரிந்து கொள்வோம்.

காலையில் எந்த விஷயத்தை பார்க்கக்கூடாது?
காலையில் எழுந்ததும் நமது மனநிலையை மகிழ்ச்சியாக தொடங்குவது மிகவும் முக்கியமாகும். சிலர் கண்விழித்ததும் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் காட்சிகதைத் தவிர்க்க வேண்டும். கோபமாக பேசுபவர்கள், குறை கூறுபவர்கள், எதிர்மறையான எண்ணங்களை மற்றவர்களிடம் பரப்புவர்கள் இவர்களை அதிகாலையில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் சண்டை மற்றும் வாக்குவாதம் போன்ற காட்சியினை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனை பார்க்கும்தேவையற்ற பதற்றம் மற்றும் கோபம் உருவாவதுடன், அன்றைய தின வேலைகளில் கவனம் செலுத்தவும் சிரமம் ஏற்படலாம்.

அழுக்கான வீடு, சோம்பேறித்தனத்தினை தவிர்ப்பது முக்கியம். அதாவது சுத்தமில்லாத வீடு, சிதறி கிடக்கும் பொருட்கள் இவற்றினை பார்ப்பது மனதில் குழப்பம் ஏற்படும் இந்த சூழ்நிலையை காலையில் எதிர்கொள்வது அன்றைய செயல்பாடுகளை தடை செய்யும். ஆதலால் இரவு தூங்குவதற்கு முன்பு ஓரளவிற்கு அறையை ஒழுங்குப்படுத்தி வைப்பது முக்கியம். மேலும் சோம்பேயியான நபர்களையும், நேரத்தினை வீணடிக்கும் நபர்களையும் பார்ப்பதையும் தவிர்க்கலாம்.

காலையில் கண்ணாடியை பார்ப்பது, விலங்குகளின் சண்டை இவற்றினை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மனதில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கலாம்.
படுக்கையிலிருந்து எழும்பும் போது கைபேசியை பயன்படுத்தாமல் நல்ல நாளுக்காக எளிய பழக்கங்களை காலையில் ஏற்படுத்திக் கொள்ளலாம். வீட்டை சுத்தமாக வைப்பது, அமைதியாக இசை கேட்பது, உடற்பயிற்சி போன்றவை உங்களை அமைதியாக வைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |