கணவரை பிரிந்த சைந்தவி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவு- குழப்பத்தில் ரசிகர்கள்
கணவரை பிரிந்த சைந்தவி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜி.வி பிரகாஷ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜி.வி பிரகாஷ்.
இவர் நடிகராக அறிமுகமாவதற்கு முன்னர் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். இன்றும் மெல்லிசையில் ரசிகர்களை கவர்வதில் வள்ளவராக இருக்கிறார்.
இப்படியொரு நிலையில் பள்ளி பருவத்திலிருந்து நண்பியாக இருந்த பாடகி சைந்தவியை காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றியாக தற்போது பெண் குழந்தையொன்றும் இருக்கிறது.
திருமணமாகி 11 வருடங்களாக கணவன்- மனைவியாக வாழ்ந்த ஜோடி சில தினங்களுக்கு முன்னர் பிரிவை சமூக வலைத்தளங்களில் அறிவிருந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இவர்களின் பிரிவிற்கான காரணத்தை விமர்சகர்கள் வலைப்போட்டு தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சைந்தவியின் இன்றை பதிவு
இப்படியொரு நிலையில் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி தரப்பிலிருந்து சில பதிவுகள் வந்தாலும் இருவருமே உண்மையான காரணத்தை வெளியில் கூறாமல் இருக்கிறார்கள்.
அந்த வகையில் இன்று சைந்தவி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் ஜி வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு அதே நட்புடன் பயணிப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளதுடன், “ கணவன் - மனைவி பிரிந்த பின்னர் நண்பர்களா? ” என கருத்துக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
— Saindhavi (@singersaindhavi) May 16, 2024