பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம்
Bigg Boss Voice stop: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை வருடங்களாக இல்லாத புதிய டாஸ்க் ஒன்று இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ்
கடந்த செப்டம்பர் மாதம் பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 19 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வைல்டு கார்டு போட்டியாளராகவும் சிலர் வந்தனர்.
இந்நிலையில் தற்போது 70 நாட்கள் கடந்து செல்லும் நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அக்ஷிதா, அஸ்மிதா என இருவர் வெளியேற்றப்பட்டனர்.

அதே போன்று எவிக்ஷன் ப்ரீ பாஸ் ஷமா, டிடிஎஃப், ஜேசன் இவர்களிடம் இருந்தது. இதில் ஷாமா எவிக்ட் ஆகி கடந்தவாரம் வெளியேறினார். டிடிஎஃப் தனது பாஜை முகேஷிற்கு கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.
நேற்றைய தினம் யாரும் எதிர்பாராத நிலையில் ஜேசன் ஆட்டத்தை மாற்றினார். தனது பாஸை பயன்படுத்தப் போறீங்களா என்று விஜய் சேதுபதி கேட்டதற்கு, ஆம் என்று பதில் கொடுத்து தனது முக்கிய எதிரியான அவினாஷை காப்பாற்றுவதாக கூறியது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
மேலும் ரேங்க் டாஸ்க் குறித்து பேசுகையில் விஜய் சேதுபதியையே முனியம்மா வாயடைக்க வைப்பது போன்று பதில் கொடுத்தார். ஆதலால் ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகின்றார்.
பிக்பாஸின் தலைகீழ் ஆட்டம்
இந்நிலையில் ப்ரொமோ காட்சி வெளியாகி பார்வையாளர்களை மட்டுமின்றி போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இதுவரை இத்தனை ஆண்டுகள் ஒலித்துக் கொண்டிருந்த பிக்பாஸ் குரல் நிறுத்தப்பட்டது.
ஆனால் பிக்பாஸின் அதிகாரம் உள்ளே இருக்கும் என்று கூறப்பட்டு, இந்த அதிகாரத்தினை வினோத் பெற்றுள்ளார். அதாவது ஜுனியர் பிக்பாஸாக வினோத் பதவி ஏற்றுள்ளார்.
இதனால் பிக்பாஸ் வீடு இந்த வாரம் மேலும் ரணகளமாகியுள்ளது. மேலும் பிக்பாஸை கேள்வி கேட்கும் அளவிற்கு போட்யடிளார்கள் எதிர்த்து நிற்கின்றனர்.
வீட்டிற்குள்ளேயே போட்டியாளர்களை டிவி-யில் அவதானித்த ஜுனியர் வினோத் ஷாந்திகாவிடம் நேரடியாக வந்து கேள்வி எழுப்பினார். ஆனால் ஷாதிகா வினோத்திடம் மேலும் மேலும் சண்டை போடும் விதமாக பேசியதால், ஜுனியர் பிக்பாஸாக இருக்கும் வினோத் பிக்பாஸின் முடியே இறுதியானது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |