கணவரின் குடும்பத்தாரால் தாய்க்கும் தனக்கும் நேர்ந்த கொடுமை! விவாகரத்து குறித்து போட்டுடைத்த விஜே மகேஸ்வரி
தமிழின் 90ஸ் களில் பல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே மகேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகேஸ்வரி மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அண்மையில், இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.
கொடுமை செய்தார்கள்
இந்நிலையில், விஜே மகேஸ்வரி திருமணத்திற்குப் பின்னர் தனது கணவர் வீட்டில் தான் அனுபவித்த கொடுமைகளை பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், கணவர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்கள் தன்னை அடிமைப்படுத்தியதாகவும், ஆண் நண்பருடன் பழக கூடாது சீரியல்களில் நடிக்க கூடாது என்றும் நிபந்தனை விதித்ததாகவும், அதனால் தான் தொகுப்பாளினியாக இருந்தேன் என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தனது அம்மாவுக்கு செய்த சிறு சிறு உதவிகளை கூட செய்யக் கூடாது என்று தடுத்து விட்டதாகவும் கூறினார்.
அம்மாவிடம் செய்த கொடுமை
வறுமையில் வாடிய அம்மா வீட்டு வேலைக்கு செல்ல முடிவு எடுக்க வளர்த்த என் அம்மாவை எப்படி நான் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனால் தான் பிரச்சினைகள் அனைத்திலும் இருந்து விடுவித்து கொள்ள விவாகரத்து பெற முடிவை எடுத்ததாகவும், அதன் பின் தான் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விஜே மகேஸ்வரிக்க்கு கேஷவ் என்ற ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.