திருமணம் முடிந்து ஒரே வருடத்தில் விவகாரத்து! இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்த விஜே மகேஸ்வரி
விஜே மகேஸ்வரி முதல் முறையாக தனது திருமண வாழ்க்கையை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே மகேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகேஸ்வரி மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது மகேஸ்வரி விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வரும் மகேஸ்வரி ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, என்னுடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்றது. பிறகு நான் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை.
என்னை புரிந்து கொண்டு என்னுடைய பையனையும் ஏத்துக்கிற மாதிரி ஒரு துணையை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற பயம் தனக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.