நடக்க கூட முடியாமல் பரிதாபமாக மாறிய விஜே கல்யாணி: என்ன நடந்தது?
நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் இருந்த கல்யாணியின் உடல் நிலை குறித்து உருக்கமான பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜே கல்யாணி
தமிழ் சினிமாவிற்கு ஜெயம் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானவர் தான் கல்யாணி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 15 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்பதால் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர், போன்ற சீரியல்களில் நடித்தார்.
அத்தோடு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மாறி படும் பிஸியாக இருந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு ரோகித் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். இவருக்கு தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்.
மோசமான உடல்நிலை
இந்நிலையில், அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. நடிகை கல்யாணி கடந்த ஒன்றரை மாதங்களாக உடல்ரீதியாக மோசமாகியிருக்கிறார்.
இவருக்கு 2016ஆம் ஆண்டு முதுகின் தண்டுவடம் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அதன்பின் குழந்தை பிறந்து 6 மாதத்தில் மீண்டும் உடலில் பிரச்சினை ஏற்பட்டது.
மீண்டும் வைத்திய சிகிச்சை மேற்கொண்ட போது முன்னதாக செய்துக் கொண்ட அறுவை சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் மீண்டும் முன்பு வைக்கப்பட்ட பிளேட் மற்றும் ஸ்க்ரூவை மாற்றி சிகிச்சை செய்ய வேண்டும் ஆனால் இந்த முறை குணமாவதற்கு நீண்ட காலம் செல்லும் எனவும் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், என் உடன் இருந்த அனைத்து மருத்துவர்கள் குழுவிற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்... அதோடு என் கணவர் ரோஹித் அரவிந்த் ஆக்சன் என்னுடன் இந்த வலியிலும் அனைத்து கட்டங்களிலும் என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு என்னுடன் நின்றதற்கும் முக்கியமாக என் 5 வயது மகள் நவ்யா கொடுத்த அளவு கடந்த பாசமும்... என்னுடைய இந்த நிலையின் மீது அவள் கொண்ட அளவு கடந்த புரிதலை என்னால் நம்பவே முடியவில்லை.
நான் கடக்க வேண்டிய பாதை இன்னும் தூரம் இருக்கிறது ஆனால் நான் இருக்கும் குடும்பத்திற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனிமேல் என் உடலை நான் எதற்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |