என் பொண்ணு Gay-ஆ இருந்தாலும்.. பிரபல நடிகை ஓபன் டாக்
வெள்ளத்திரை, சின்னத்திரை என கலக்கிய நடிகை கல்யாணி, தன் மகள் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தாலும் ஆதரவு அளிப்பேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர் கல்யாணி.
பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற அவர் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
கடந்த 2013ம் ஆண்டு ரோஹித் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.
இவர்களுக்கு 2018ம் ஆண்டு நவ்யா என்ற அழகான பெண் குழந்தையும் பிறந்தது, தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கம் தலை காட்ட தொடங்கியுள்ளார்.
தற்கொலை முயற்சி
இந்நிலையில் கல்யாணி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு எட்டு வயது இருக்கும். தற்போது சினிமாவில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக ஒருவர் இருக்கிறார்.
அவர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். அவர் நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் தொடுவார்.
பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன், அதை இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கும்.
என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன்.
டிவியில் அவருடைய நிகழ்ச்சி பார்க்கும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் தான் வந்தது. அப்போது தான் என்னுடைய கணவரிடம் நான் சொன்னேன்.
அவரும் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு சமாதானம் சொன்னார். இப்போது நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது.
இதன் காரணமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். தற்கொலைக்கு கூட முயன்றேன் என உருக்கமாக பேசினார்.
ஓரினச்சேர்க்கையாளராக இருந்தாலும்
இந்நிலையில் தன் மகள் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தாலும், திருநம்பியாக மாற வேண்டும் என்றாலும் தன்னுடைய முழு ஆதரவு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், என் மகள் எங்களால் தான் பூமிக்கு வந்தாள், அவள் என்னவாக ஆசைப்பட்டாலும் முழு ஒத்துழைப்பை வழங்குவேன், பெற்றோர்கள் ஆதரித்தால் மட்டுமே சொந்த பந்தங்கள் ஏற்றுக்கொள்ளும், சமுதாயமும் ஏற்றுக்கொள்ளும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.