15 ஆண்களை வசியம் செய்து மணமுடித்த கல்யாணி ராணி! வலைவீசி தேடும் போலிசார்
முகநூலில் காதலர்களை சேர்த்து ஏராளமான பொய்களை கூறி 15 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி ஓட்டம்பிடித்த பெண் தொடர்பில் அதிர்ச்சிச் சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
முகநூல் காதல்
இந்தியாவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). இவர் கூலித்தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார்.
இவர் சமூகவலைத்தளமான முகநூலில் அதிகமான நண்பர்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் அருள்ராஜ்க்கு வேலூரைச் சேர்ந்த பெண்ணொருவருடன் பழக்கம் ஏற்பட்டு காலப்போக்கில் காதலாக மாறியது.
பிறகு இருவரும் கடந்த வருடம் அப்பகுதியில் உள்ள திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.
மாயமான மனைவி
இவ்வாறு திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து வருகையில், கூலி வேலைக்கு செல்லும் அருள்ராஜ் வெளியூர்களில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்போது இவரின் மனைவியும் உறவினர்களை பார்க்கப்போவதாக சொல்லி அடிக்கடி வெளியில் சென்று விடுவார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் தனது தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை, 90 ஆயிரம் பணமும் வாங்கி வைத்திருக்கிறார். இந்த பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ராஜ் திருமணம் செய்த பெண் நகை, பணத்துடன் திடீரென மாயமாகியுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இவ்வாறு தனது மனைவி எடுத்துக்கொண்டு சென்ற நகை மற்றும் பணத்துடன் வருவார் எனக் காத்திருந்தார். ஆனால் நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அருள்ராஜிடம் அப்பெண் கொடுத்து முகவரியொன்றும் தொலைப்பேசியொன்றும் இருந்தது.
இவைகளைக் கொண்டு தேடிப்பார்த்தப்போது அவை அனைத்தும் போலியானது எனத் தெரியவந்துள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார்.
பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய வேளையில் அப்பெண் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது அருண்ராஜ் திருமணம் செய்துக் கொண்ட பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை திருமணம் செய்து பல மோசடிகளை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், இவ்வாறு தலைமறைவான பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.