அட்ஜஸ்ட் செய்ய சொல்லி அம்மாவிடமே கேட்டார்கள்.. பிரபல நடிகையின் கதறல்!
சினிமாதுறையில் ஆரம்ப காலத்தில் பல நடிகைகளும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என இயக்குனர்கள் சொல்லும் எந்த கதாபாத்திரம் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு நடித்து விடுவார்கள்.
அதற்கு காரணம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதுதான். ஆனால், காலப்போக்கில் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட் செய்தால் தான் சாதிக்க முடியும் என்று பல முன்னணி நடிகைகளும் பெயரை குறிப்பிடாமல் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறிவந்தனர்.
அந்த வகையில், பிரபுதேவா லைலா நடிப்பில் 2001-ல் வெளிவந்த படம், அள்ளி தந்த வானம், இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி.
இவர், பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆண்டாள் அழகர் உட்பட சின்னத்திரை நடிகையாக பிரபலமான கல்யாணி கதாநாயகியாக நடிக்க இயலாமல் போனது குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில், குழந்தை நட்சத்திரம் போல அவ்வளவு எளிதல்ல சினிமாவில் கதாநாயகியாக நடிப்பது. தயாரிப்பாளர் இயக்குனர் உட்பட உயர்மட்டத்தில் இருக்கும் பலரிடத்திலும் அட்ஜஸ்மெண்ட்டில் இருக்க வேண்டும் என் தாயிடமே கூறியிருக்கிறார்கள்.
இதுபோன்ற விடயங்கள் தான் சினிமாத்துறையில் வழக்கமாக நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்தால் வாய்ப்புகள் தொடரும் எனவும் அவர்கள் கூறியதாக கல்யாணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.