Viral video: வருங்கால மனைவியை வாரி அனைத்து வரவேற்பு கொடுத்த விஷால்- அதே அன்பு நிலைக்கும்!
வருங்கால மனைவி வாரி அனைத்து வரவேற்பு கொடுத்த விஷாலின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
விஷால்
கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஷால். இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, அவரது கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து விஷால் திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.
வருங்கால மனைவி கட்டியணைக்கும் காட்சி
இந்த நிலையில், நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருநங்கைகளின் அழகுராணி போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது அங்கு விஷால் மயக்கமடைந்தார். இது தொடர்பில் பல செய்திகள் வெளியாகியன.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார்.
இன்றைய தினம் பட விழாவில் தன்சிகாவுடன் வந்து திருமணம் நடக்கப்போகும் திகதி அறிவித்துள்ளார். அத்துடன் தன்னுடைய வருங்கால மனைவிக்கு சில சத்தியங்களையும் செய்துள்ளார்.
வருங்கால மனைவியை திரைப்பட விழாவில் வரவேற்கும் காட்சியை இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |