கேட்ட வரத்தை நொடியில் கொடுக்கும் விசா பிள்ளையார்! எங்குள்ளது தெரியுமா?
பொதுவாக இறைவன் நாம் வேண்டுக் கொள்வதை உடனே தரவிட்டாலும் காலங்கள் செல்ல செல்ல நாம் நினைக்கும் காரியங்கள் நடக்கும் என்பது எமது நம்பிக்கையாக இருக்கின்றது.
அந்த வகையில், இலங்கை, கொழும்பில் வெள்ளவத்தை எனும் இடத்தில் கடற்கரையை பார்த்த மாதிரி பிள்ளையார் கோவில் ஒன்று இருக்கின்றது.
இங்கு வேண்டிக் கொள்ளும் காரியங்கள் உடனே நடப்பதாக அங்குள்ள பக்தர்கள் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்கள்.
அத்துடன் இலங்கையிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் இங்கு அதிகமாக வருகிறார்களாம்.
ஏனெனின் எல்லா விடயங்களும் சரியாக வந்தாலும் விசா சரியாக கிடைக்காமல் பல சிரமங்களை எதிர்க் கொண்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த கோயிலுக்கு சென்று ஒரு நேர்த்திக்கடன் வைத்தால் கண்டிப்பாக விசா கிடைக்கும் என அங்கிருந்தவர்கள் கூறுகின்றார்கள்.
விசா பிள்ளையார் சிறப்புகள்
இதன் காரணமாக அங்கிருந்தவர்கள் இந்த கோயிலை “ விசா பிள்ளையார்” என செல்லமாக அழைக்கிறார்கள்.
இது மட்டுமன்றி இந்த கோயில் திரை போட்டு முடப்படுவதில்லையாம். காரணம் வெளியிலிருந்து வருபவர்கள் இரவு நேரங்களில் வந்து வழிபட வேண்டும் என்பதற்காக மூடாமல் வைத்திருக்கிறார்களாம்.
அந்த வகையில் விசா பிள்ளையார் பற்றி இன்னும் மேலதிகமாக விடயங்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |