இந்த ராசிக்காரங்களுக்கு வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் அதிகமாம்: உங்க ராசி இதுல இருக்கா?
பிறந்த ராசியின்படி நமது ஆளுமைகளையும் எதிர்காலத்தையும் கண்டறியலாம். இன்றைய காலகட்டத்திழல் கல்வி, வேலை குடியேற்றம், பயணம் என்பவற்றுக்கான அனைவரும் வெளிநாடு செல்ல வேண்டுமென விரும்புகிறார்கள்.
வெளிநாட்டு பயணங்கள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையிலோ நடக்கலாம். ஆனால், ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு நழுவிக்கொண்டே செல்லலாம்.
அதற்கும் ராசிக்கும் கூட தொடர்பிருக்கின்றது. சரி இனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கிறதென பார்ப்போம்.
மேஷம்
பொதுவாகவே இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்களாம். அந்த வகையில் இவர்கள் கல்வி, தொழில் நோக்கங்களுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது. இவர்களின் கடின உழைப்பால் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்
இவர்களுக்கு கல்வியின் நிமித்தம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு மிகவும் அதிகம். இந்த ராசியில் பிறந்தவர்கள் துரிதமாக முடிவெடுக்கும் சக்தி கொண்டவர்களாக இருக்கின்றனர். இளம் வயதிலேயே வெளிநாடு செல்லும் வாய்ப்பு இவர்களுக்குண்டு. இவர்களின் கிரக நிலைகள் கூடி வந்தால் வெளிநாட்டிலேயே செட்டிலாகுவதற்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
இவர்களுக்கு பதவி உயர்வு மூலமாகவோ அல்லது தொழிலின் மூலமாகவோ வெளியூர் செல்லும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் இணக்கமாக இருக்கக்கூடியவர்கள். இருப்பினும் இவர்களுக்கு வெளிநாட்டில் செட்டிலாகும் வாய்ப்புகள் இல்லை.
கன்னி
இந்த ராசியில் பிறந்தவர்கள் வெளிநாட்டை சுற்றிப் பார்க்க வேண்டுமென நினைப்பார்கள். இவர்கள் ஃபேஷன், மொழி, வரலாறு என்பவற்றுக்கு எளிதாக ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். ஆனால், வெளிநாட்டில் செட்டிலாக மாட்டார்கள்.
தனுசு
இவர்கள் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சாகச விரும்பிகள். இவர்கள் கலாசாரம் மற்றும் சுதந்திரமாக ஒரு இடத்துக்கு பயணிக்க விரும்புகிறார்கள்.