கேப்டன்சி விவகாரம்.. நடந்தது என்ன? ரோகித்தை பற்றி முதன் முறையாக உண்மையை விளக்கிய விராட் கோலி
இந்திய அணியில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து பலவிதமான சர்சைகள் எழுந்துகொண்டே இருக்கிறது. இந்த சம்பவம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் எதிரெலிக்க, ஒரு நாள் போட்டியிலும் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் பரவி வந்தன.
இதே போல் விராட் கோலி கேப்டனாக செயல்படும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா வெளியேறியுள்ளார். காயத்தை அவர் காரணமாக கூறினாலும், இருவருக்குள் இருக்கும் பிரச்சினை இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு முதன் முறையாக விராட் கோலி பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார். அதில், நான் நிச்சயம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுவேன், எப்போதும் இந்திய அணிக்காக இருப்பேன். கேப்டன்சி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது தகவல்கள் முற்றிலும் பொய்யானது, இந்த சர்ச்சைகள் குறித்து அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
டெஸ்ட் அணி தேர்வு செய்த போது, என்னிடம் ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டது. நான் அப்போதே சம்மதம் என்று கூறிவிட்டேன். மேலும், கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது எனக்கு திடீரென்று அறிவிக்கப்பட்டது தான்.
ஒரு ஒன்றரை மணி நேரம் முன்பு என்னை அழைத்துச் சொன்னார்கள். தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் நான் இருக்கிறேன். அதற்காக சிறப்பாகத் தயாராகி உள்ளேன். இந்திய அணிக்காக விளையாடுவதில் இருந்து எதுவும் என்னைத் தடுக்காது. இதுவரையில் கேப்டன் ஆக பொறுப்புடனும் நேர்மை உடனும் செயல்பட்டு இருக்கின்றேன்.
பேட்டிங் பொறுத்த வரையில் சர்வதேச அளவில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் ஒருவருக்கு நிச்சயம் எப்படி திறனை வெளிக்காட்ட வேண்டும் என்பதை பற்றி எனக்கு தெரியும். ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் ஆக நான் தொடரவே விரும்பினேன்.
ஆனால், தேர்வாளர்கள் அது போல் நினைக்கவில்லை. ரோகித் சர்மா ஒரு சிறந்த கேப்டன் தான். இனி வரும் காலங்களில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எனது அணிக்கு சிறந்த உறுதுணை ஆக இருப்பேன்.
அணியை முன் நோக்கி நகர்த்துவது எனது கடமை ஆக இருக்கும். மேலும், கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே எனக்கும் ரோகித்துக்கும் இடையேயான உறவில் எந்தவித பிரச்சினையும் இல்லை.
நான் கேப்டன் பதவி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டதற்கு காரணம் வெளிப்படையானது தான். ஐசிசி தொடரை நான் வெல்லவில்லை அவர்கள் எடுத்த சரியானது தான் எனக்கு புரிகிறது என பேசியுள்ளார்.
? ? @ImRo45 and Rahul Dravid have my absolute support: @imVkohli #TeamIndia #SAvIND pic.twitter.com/jXUwZ5W1Dz
— BCCI (@BCCI) December 15, 2021