சிரித்த முகத்துடன் அச்சு அசல் பொம்மையாக மாறிய மீனா! வைரலாகும் செல்பி வீடியோ
பிரபல முன்னணி நடிகைகளின் ஒருவரான நடிகை மீனா பொம்மை போன்று செல்பி கமராவில் வெளியிட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
80 கள் மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிகர் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து முத்து படத்தின் மூலம் உலக முழுவதும் பிரபல்யமானார்.
இவரின் யதார்த்தமான முக அமைப்பாலும் குழந்தை சிரிப்பாலும் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
காதல் திருமணம்
இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த கணிணி பொறியிலாளர் வித்யாசாகரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு நைனிகா எனும் பெண் குழந்தையொன்றும் இருக்கிறது. இவரின் குழந்தையும் விஜயின் “ தெறி ” என்ற திரைப்படத்தில் நடிப்பால் அனைவரையும் மிரள வைத்துள்ளது.
மேலும் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் நுரையீரல் பிரச்சினை ஏற்படும் சிகிச்சை பலனின்றி இவருடைய கணவர் சமிபக்காலத்திற்கு முன்பு அகால மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து இவரின் இரண்டாவது திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் இவர் அதனை தலையில் பொட்டுக் கொள்ளாமல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
இணையவாசிகளை கவர்ந்த வீடியோ காட்சி
இதன்படி, கிறிஸ்மஸ் தினத்தையோட்டி வெளியில் சென்று இவரை நடக்கும் போது செல்பி கமராவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
— Meena Sagar (@Actressmeena16) December 28, 2022
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் “ 40 வயதை கடந்த பின்னரும் இவரின் அழகு குறையவில்லையென” பதிவிட்டுள்ளனர்.