Viral video: மோட்டார் சைக்களில் சென்ற லிட்டில் கிருஷ்ணர்.. இதயங்களை கொள்ளையடித்த காணொளி
பெற்றோர்களுடன் மோட்டார் மைக்கில் பயணம் செய்த லிட்டில் கிருஷ்ணாவின் காணொளியொன்று இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
லிட்டில் கிருஷ்ணாவின் சேட்டை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் கிருஷ்ண ஜெயந்தி.
இந்த நாளில் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்ததாக கதை உள்ளது. தாய்மை, அன்பு, பாசம், காதல் உணர்வுகளைத் தாங்கி, அன்பு ஒன்றே நிலையானது என்பதை இந்த நாள் பக்தர்களுக்கு உணர்த்துகிறது.
கிருஷ்ணரை தங்கள் வீட்டு குழந்தையாகப் பாவித்து தங்கள் வீட்டு குழந்தைகளுக்குக் கிருஷ்ணன் வேடம் அணிந்து கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், கிருஷ்ணர் வேடம் போட்டு குழந்தையொன்று தன்னுடைய அப்பா- அம்மாவுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் காணொளியொன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அந்த காணொளியில் தன்னுடைய அப்பா காணொளி எடுப்பதை தெரிந்து கொண்ட குழந்தை, அவருடைய மழலை மொழியில் கதைக் கொண்டு வருகிறது. தன்னுடைய குழந்தையின் குரலை கேட்ட இருவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “லிட்டில் கிருஷ்ணாவின் மோட்டார் சைக்கிள் பயணமா?” எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Little krishna 🥰 pic.twitter.com/ZzotO4fBSP
— Aditya Tiwari ❤️👻 (@aditiwari9111) August 16, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |