15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல்
15 வயதில் திருமணம் செய்து கொண்ட பாக்கியலட்சுமி செல்வி, அவர் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை மனம் திறந்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாக்கியலட்சுமி சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் கம்பம் மீனா.
இவர், இதற்கு முன்னர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகியது.
வழக்கமான ஒரு சீரியல் போன்று அல்லாமல் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை கருவாகக் கொண்டு 6 வருடங்கள் நகர்த்தப்பட்டது.
சீரியலில் பாக்கியாவிற்கு ஒரு துணை கதாபாத்திரமாக வந்த செல்வி, தன்னுடைய மகனை படிக்க வைத்து பாக்கியாவின் பொண்ணான இனியாவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
இந்த விடயம் சமூகத்தில் நடப்பவை என்றாலும் செல்வியின் வளர்ச்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டது.
15 வயதில் திருமணம், விவாகரத்து
இந்த நிலையில், கம்பம் மீனா சீரியல் முடிந்த பின்னர் எப்படி இருக்கிறது? அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விடயங்களையும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதாவது, “என்னுடைய அப்பா இறந்து விட்டார். என்னுடைய அம்மா தான் என்னை வளர்த்தார். 15 வயதில் என்னுடைய மாமன் மகனை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அந்த வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு இல்லை. அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர். அதன் பின்னர், நடிப்பில் ஒரு ஆர்வம் இருந்தது. மகன்களை படிக்க அனுப்பி விட்டு, நடிக்க வாய்ப்பு தேடி வந்தேன்.
என்னுடைய திருமண வாழ்க்கை இப்படி போனதால் அதனை நினைத்து என்னுடைய அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
கஷ்டத்திற்காக இதை செய்தேன்..
கடந்த 2009 ஆம் ஆண்டு சீரியல் நடிக்க வந்தேன். எனக்கும் சினிமாவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. என்னுடைய ஒரே லட்சியம் என்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது நல்ல நிலைமைக்கு வளர்த்து விட வேண்டும். அதற்காகவே வெறித்தனமாக உழைத்தேன். ஆஸ்டலில் தங்கி மகன்கள் படித்தார்கள்.
அவர்களுக்கு அனைத்து விடயங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இருவரும் என்னை புரிந்து கொண்டு எனக்கு பலமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் உண்மையாக இருந்தால் போதுமாக இருக்கும்..” என அவர் மனத்திற்குள் இருக்கும் கவலையை கொட்டி பதில் கொடுத்திருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |