கால்களை பிளந்தப்படி சாலையில் மல்லாக்க படுத்த நாய் - இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
சாலையில் உரிமையாளருடன் வாக்கிங் வந்த நாய் நடுரோட்டில் படுத்து கொண்டு அலப்பறை செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் காட்சி
சமூக வலைத்தளங்களில் சமீபக்காலமாக விலங்குகளின் வீடியோக்காட்சிகள் வைரலாகி வருகின்றது.
இது போன்ற காணொளிகளை பார்க்கும் போது கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது. இப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகின்றது.
உரிமையாளருடன் வார்க்கிங் வந்த நாயொன்று நடுரோட்டில் படுத்து கொண்டு எழும்பமால் அடம்பிடித்து கொண்டிருக்கின்றது.
குறித்த உரிமையாளர் நாயை எழுப்பி எழுப்பி பார்க்கிறார். முதலில் எழும்பி நின்ற நாய் மீண்டும் அண்ணாந்து படுத்து கொள்கின்றது.
இறுதியாக என்ன செய்தார் தெரியுமா?
இதன் அலப்பறையை தாங்க முடியாத உரிமையாளர் இறுதியாக நாயை குழந்தையை போல் தூக்கிக் கொண்டு செல்கிறார்.
இந்த வீடியோக்காட்சியை சாலையில் சென்று கொண்டிருந்த இணையவாசியொருவர் பதிவு செய்து அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும் நாயின் செயலை பார்த்த இணையவாசிகள் நகைத்தது மட்டுமல்லாது “ சாலையின் வெப்பநிலையை அறிந்து கொண்ட சுகமாக படுத்துறங்க நினைத்துள்ளது அதான் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது.” என கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.
“Come on buddy, you’re embarrassing me” ?
— Buitengebieden (@buitengebieden) July 10, 2023
? TT: patrick.ryan22 pic.twitter.com/V4mdnicoeM
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |