எஜமானாரை காப்பாற்ற இரண்டு நாய் செய்த தியாக செயல்.. கண்ணீரில் மூழ்கிய கிராம மக்கள்!
எஜமானரை காப்பாற்ற வீட்டிற்குள் நுழைய முயன்ற விஷ பாம்பை இரண்டு செல்லப்பிராணிகள் நாய் கடித்துகுதறி, தானும் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், ஜெய்ராம்பூர் கிராமத்தில் கடந்த நாட்களுக்கு முன்பு வீட்டில் முன் கருப்பு நிறத்தில் விஷப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதைக்கண்ட வளர்ப்பு நாய்களான இரண்டும் சத்திமிட்டு குழைக்கிறது.
ஆனாலும் பாம்பு வீட்டிற்குள் நுழைய முயன்றதால், எஜமானாரை காப்பாற்ற பாம்பை தாக்க முயன்றுள்ளது. இதனால், நாயுற்கும் பாம்புக்கும் இடையேயான இரண்டு மணிநேர சண்டையில், பாம்பை கடித்துகுதறி இரண்டு துண்டாக போட்டுள்ளது.
ஆனால், சண்டையின் போதே பாம்பிடம் கடிப்பட்ட இரண்டு நாய்களும், சிறிது நேரத்திற்கு பிறகு விஷத்தன்மையால் இறந்துபோயுள்ளன. இந்த சண்டையின் போதே ஊர் பொதுமக்களும், நாயின் உரிமையாளர்களும் அந்த இரண்டு நாய்களை பின் வாங்க எவ்வளவோ முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், நாய் விடாமல் பாம்பிடமே சண்டையிட்டுள்ளது. இறந்த நாய்களை கண்டு, உரிமையாளர் மட்டுமின்றி அங்கிருந்த பொதுமக்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், கண்ணீருடன் உரிமையாளரும், Sheroo மற்றும் Coco இரண்டு நாய்களின் மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களை காப்பாற்ற அவர்கள் உயிரையே கொடுத்துள்ளார்கள்.
அவர்களின் இந்த தியாகத்தை நாங்கள் ஒரு போதும் மறக்கமாட்டோம் என செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்து இருக்கிறார்.