ஏழு ஜென்ம பாவத்தை சில நிமிடங்களில் போக்க இதனை செய்திடுங்கள்!
தினந்தோறும் சிவனுக்கு வில்வத்தை வைத்து வழிபாடு செய்தால் ஏழு ஜென்ம் பாவத்தை போக்கலாம் என்பது ஐதீகம்.
பெருமாளுக்கு எப்படி துளசி எனும் அற்புத மூலிகை பிடித்ததாக இருக்கின்றதோ, அதே போல் வில்வ மரத்தின் இலை, பழம் சிவபெருமானுக்கு இஷ்டமானது.
வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் இருக்கின்றது.
மூவிதழ், ஐயிதழ், ஏழு இதழ் என இருந்தாலும் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும்.
வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது.
பொதுவாக, பூஜைக்கு பயன்படுத்திய பூக்கள், பழங்களை மீண்டும் பயன்படுத்தும் வழக்கமில்லை. ஆனால், வில்வ இலையினை மட்டும் ஒருமுறை பூஜைக்கு பயன்படுத்தி கழுவி மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம்.
இப்படி ஒரு வில்வத்தையே ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம். வில்வ மரம் சுத்தமான இடத்தில் வளர்ந்திருந்தால் மட்டுமே அதன் இலைகளை பூஜைக்கு பயன்படுத்தலாம்.
சுடுகாட்டுக்கு அருகிலோ குப்பைக் கூளங்களுக்கு அருகிலோ மரம் இருந்தால் அந்த மரத்தின் இலைகளை பயன்படுத்தக்கூடாது.
தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
இதேபோன்று வில்வ மரத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் பால் ஊற்றி வணங்குவதால் செல்வம் பெருகும்.
வில்வ மரத்திடம் நம் குறைகளைச் சொல்லி வழிபட அது விரைவில் நிவர்த்தி ஆகும். ஏனெனில் வில்வ மரத்திற்கு நாம் கேட்கும் பிரார்த்தனைகள் சிவனிடத்தில் முறையிட்டு அதை தீர்க்கக் கூடிய வல்லமை மிக்கது என கூறப்படுகிறது.
மருத்துவம்
வில்வ இலையை குடிநீரில் போட்டு ஊற வைத்து அல்லது கொதிக்க வைத்தோ, கசாயமாகவோ நாம் எடுத்துக் கொள்ள மன அழுத்தம் நீங்கும்.
வில்வ மரத்திலிருந்து தயாராகும் சிரப்பை தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் குடித்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.
மேலும் பித்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய முக்கிய மூலிகையாகவும் வில்வ மரம் விளங்குகிறது.