இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை தோற்றகடிப்பது அசாத்தியம்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசியை போலவே அவர்களின் பிறப்பு நட்சத்திரமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, தனித்துவமான ஆளுமைகளை தீர்மாணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே அசாத்தியமான திறமைசாலிகளாக இருப்பார்களாம். இவர்களை தோற்கடிப்பது மிகவும் சவாலானது.
அப்படி யாராலும் வெல்ல முடியாதளவுக்கு அதீத திறமைகொண்ட நட்சத்திரத்தினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பரணி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பிலேயே மிகுந்த உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் தலைமை பதவிக்குரிய குணம் பிறப்பிலேயே இருக்கும், அவர்கள் சவால்கள் மற்றும் போட்டி நிறைந்த சூழலில் சிறப்பாக செயல்படுட்டு வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள்.
சுக்கிரனால் ஆளப்படும் இவர்கள், பயம் என்ற நாமமே அறியாதவர்களாக இருப்பதால், இவர்களை தோற்கடிப்பது யாருக்கும் இயலாத காரியமாக இருக்கும்.
மகம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிழல் கிரகமான கேதுவால் ஆளப்பவதால், எந்த கடினமான சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் இயற்கையான தன்னம்பிக்கையையும், அசாத்தியதான தைரியத்தையம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் காணப்படும் அசைக்க முடியாத மன உறுதியையும், நேர்தையும் இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணடமாக அமையும். இவர்களுடன் போட்டி போட்டு ஜெயிப்பது இயலாத காரியமாக இருக்கும்.
விசாகம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குருபகவானால் ஆளப்படுவதால், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
அதே சமயம் தீவிர லட்சிய வாதிகளாகவும், இலக்குகளை அடைய எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்ச்சி செய்து பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டு எழும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை வெல்வது கடினம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |