இந்த ராசியினர் சிறந்த கேட்கும் திறன் கொண்டவர்களாம்... இவர்களிடம் வார்த்தைகளில் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரைத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, தனித்துவ திறமை ஆகியவற்றுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கேட்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
எந்த வேலையில் இருந்தாலும் மற்றவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இவர்களின் காதுகளில் இருந்து தப்பாதாம். அப்படிப்பட்ட கேட்கும் திறன் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் தங்கள் சமநிலை, பகுத்தறிவு மற்றும் இயற்கையான தலைமைத்துவ திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள்.
இவரை்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையை விரும்புகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் பேசுவதற்கான சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார்கள், சரியான வார்த்தைகளையும் நேரத்தையும் பயன்படுத்தி தங்கள் செய்தியை திறம்பட வெளிப்படுத்துகிறார்கள்.
அதே போல் இவர்கள் மற்றவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனித்து பதில் கூறுவார்கள்.இவர்களின் காதுகளில் இருந்து சிறிய ஒலியும் தப்பாது.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் நண்டு போல் ஒரு பக்கம் செல்லும் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் மோதல்களைத் தவிர்க்கிறார்கள் மற்றும் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளைப் பற்றி விவாதிப்பதை விரும்புவது கிடையாது.
இவர்கள் எத்தனை வேலைகளில் கவனம் செலுத்தினாலும், இவர்கள் அருகில் பேச்ப்படும் விடயங்களில் இவர்களின் காதுகள் கவனம் செலுத்தும். இந்தளவுக்கு கேட்கும் திறன் கொண்டவர்களாக இருப்பத
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆறுதல், பொருள் வசதி மற்றும் செல்வம் ஆகியவற்றின் மீது தீராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்
அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு விசுவாசமானவர்கள், நிலையானவர்கள், பொறுமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் விடாமுயற்சியுள்ளவர்கள், ஆனால் அவர்கள் பிடிவாதமானவர்களாகவும் நெகிழ்வற்றவர்களாகவும் இருப்பார்கள்.
ஆழ்ந்த சிந்தனையாளர்களாக, அவர்கள் தங்கள் மனதில் உள்ள ஒரு பிரச்சினையைப் பற்றி சிந்திக்க கணிசமான நேரத்தை செலவிடுவார்கள் அதே நேரம் மற்றவர்களின் கருத்துக்கள் குறித்தும் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் விரைவாக கோபத்தில் பேசினாலும் ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக கேட்டு வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |