66 வயதில்10 வது குழந்தையை பெற்று சாதனை படைத்த பெண்: மருத்துவர் கூறிய அதிர்ச்சி
66வயதில் ஒரு பெண் தனது 10வது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
66 வயதில் 10 வது குழந்தை
ஜெர்மனியை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா hilderbrant என்பவர் அலெக்சாண்ட்ரா 1995 இல் rainer hilderbrant என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு 45 மற்றும் 36 வயதில் ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். பின்னர் இந்த அலெக்ஸாண்ட்ராவின் கணவர் 90 வது வயதில் காலமானார்.
இதன்பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்ட அலெக்ஸாண்ட்ரா. இவர்கள் இருவருக்கும் இரட்டை குழந்தைகள் உட்பட 7 குழந்தைகள் இருந்தது.
இந்த நிலையில் இவர் தன் 66 வயதில் திரும்பவும் கர்பமாகியுள்ளார். இவர் இயற்கை முறையில் தான் கர்ப்பமாகி உள்ளார். தற்போது பிறந்த குழந்தை 3அரை கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.
மருத்துவர்கள் கூறும்போது அதிக வயதான பெண்களுக்கு மகப்பேறு சற்று சிக்கல்தான் குறிப்பாக வயதாகி பிரசவிக்கும் போது முன்கூட்டிய
குழந்தை பிறப்பு, இருதய பிரச்சினைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிற்றில் ஒட்டுதல்கள் போன்ற சிக்கல்கள் பொதுவாக அதிகரிக்கும்
என்றும், ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட சிசேரியன் பிரசவங்களைச் செய்தவர்களுக்கு அதிக ஆபத்துகள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே இந்த பிரச்சனைகள் எதுவுமின்றி குறித்த இந்த பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் உலக கவனத்தை பெற்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |