உடம்பு சூட்டால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமாக சாப்பிடுங்க
கோடைக்காலங்களில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலால் மனிதர்களின் உடலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
உடலில் இருக்கும் வெப்பநிலை ஆரோக்கியமற்ற முறையில் அதிகமாவதால் ஹைப்பர்தெர்மியா என்னும் மோசமான நிலைக்கு ஆளாகுகிறார்கள்.
ஒருவருக்கு இந்த நிலையானது சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படுகிறது. அதிவும் குறிப்பாக உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் சென்று விடவும் வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு நீர்ச்சத்து குறையும் பொழுது உடலின் வெப்பநிலையைக் குறைக்க நிறைய உணவுகள் உதவுகின்றது. அந்த உணவுகளை கோடைக்காலத்தில் அதிகமாக சாப்பிடும் பொழுது உடலில் இருக்கும் சூடு தணிந்து விடும்.
அந்த வகையில், கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டைக் குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உடல் சூட்டை தணிக்கும் உணவுகள்
1. உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கவும், நீரேற்றமாக வைத்து கொள்ளவும் தண்ணீர் மிகவும் அவசியம். தினமும் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அதுவும் கோடைக்காலம் வந்து விட்டால் ஒரு நாளைக்கு 2.7 லிட்டர் முதல் 3.7 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
2. கோடைக்காலங்களில் தர்பூசணி பழம் அதிகமான வீடுகளில் வாங்கி சாப்பிடுவார்கள். இதில் மற்ற பழங்களிலும் விட அதிக நீர்ச்சத்து உள்ளது. சுமாராக 90% நீர் நிறைந்துள்ள இந்த பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன.
3. தர்பூசணி பழத்தை போன்று வெள்ளரிக்காயிலும் நீர்ச்சத்துக்கள் உள்ளன. நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ள வெள்ளரிக்காயை கோடைக்காலங்களில் வாங்கி சாப்பிடலாம். அத்துடன் மலச்சிக்கல் பிரச்சினையும் சரியாகும்.
4. கோடைக்காலத்தில் ஏற்படும் சூட்டை தயிர். பால் ஆகிய இரண்டு பொருட்கள் வைத்து குறைக்கலாம். தினமும் உணவுடன் இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து கொண்டால் உடல் குளிர்ச்சியடையும்.
5. நீர் அதிகமாக குடிக்க பிடிக்காதவர் இளநீர் வாங்கி குடிக்கலாம். இளநீர் குடிக்கும் ஒருவரின் உடல் வெப்பிநிலை தானாக குறையும். கோடைக்காலங்களில் வரும் பிரச்சினைகளையும் சரிச் செய்ய உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |