ஒருமுறை கிராமத்து ஸ்டைல் மட்டன் குழம்பு செய்ங்க! அப்படி அடிக்கடி செய்வீங்க
கிராமத்து ஸ்டைலில் சுவையான மட்டன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்கள் அசைவ பிரியர்களாகவே காணப்படுகின்றனர். அதிலும் மட்டன் என்றால் அலாதி பிரியம்.
ஆம் கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு வைத்தால் வீட்டில் அடிபுலியாகவே இருக்கும். தற்போது அந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் வேக வைப்பதற்கு.
மட்டன் - 3/4 கிலோ
பூண்டு - 15 பல்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
குழம்பிற்கு...
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 2 துண்டு
அன்னாசிப்பூ - 1
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - சுவைக்கேற்ப
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு
தேங்காய் - 1/4 மூடி
முந்திரி - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - சிறிது
செய்முறை:
மட்டனை நன்கு கழுவி குக்கர் ஒன்றில் போட்டுக்கொள்ளவும். அதில் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி நன்கு கிளறி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸி ஜார் ஒன்றில் தேங்காய், முந்திரி, சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியினை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
அதனைத் தொடர்ந்து வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் முன்பு வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி குக்கரில் வேகவைத்த மட்டனையும் எடுத்துபோட்டு நன்கு கிளறி விடவும்.
பின்பு மட்டன் வேக வைத்துள்ள நீரை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வைத்து கடைசியாக, தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் மட்டும் கொதிக்க வைத்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கினால் கிராமத்து ஸ்டைல் மட்டன குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |