கிராமத்து ஸ்டைலில் வஞ்சரம் மீன் குழம்பு: இப்படி செய்திருக்கீங்களா?
பொதுவாக மீன் குழம்பு என்றால் எல்ாா நாட்டிலும் வீட்டிலும் செய்வத வழக்கம். மீன் குழம்பிற்கு அடிமையாகதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் சுவை கிராமத்து பாணியில் அருமையாக இருக்கும்.
இந்த பாணியில் மீன் குழம்ப செய்யும் போது மணம் வீடு முழுவதும் வீசும் இதன் காரணமாக மீன் பிடிக்காதவர்கள் கூட மீனை சாப்பிடுவார்கள். அந்த வகையில் கிராமத்து பாணியில் எப்படி வஞ்சரம் மீன் குழம்பு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வஞ்சரம் மீன் - 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் - 15 - 20
- பழுத்த தக்காளி - 1
- மாங்காய் துண்டுகள் - 5
- பூண்டு பற்கள் - 5
- புளி - எலும்பிச்சை அளவு
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 3 டீஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
மழுன் குழம்பு செய்ய முதலில் புளியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தற்போது அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை போட்டுக்கொள்ளவும். கடுகு வெடித்ததும் தட்டிய பூண்டு பற்களை போட்டு வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூளை சேர்த்து வதக்கிக்கொள்ளளுங்கள். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி கொள்ளவும். பின்னர் அதில் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
குழம்பு ஓரளவிற்கு கொதித்ததும் கழுவி வைத்துள்ள மீன் மற்றும் மாங்காயை துண்டுகளை போட்டு கொள்ள வேண்டும். பின்னர் மண் சட்டியை மூடி போட்டு மிதமான தீயில் மீனை வேகவிடவும்.
மாங்காய் மற்றும் மீன் துண்டுகள் முழுமையாக வெந்தவுடன் குழம்பை இறக்கவும். இப்போது இதை சூடான சாதத்துடன் சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |