மீதமான பழைய சாதத்தை இனி வீச வேணாம்.. சுவையான பணியாரம் செய்யலாம்- ரெசிபி இதோ!
பொதுவாக வீடுகளில் மதியம் வைக்கின்ற சாதம் மீதமாகி விட்டால் அதனை என்ன செய்வது என தெரியாமல் வீட்டிலுள்ள பெண்கள் யோசித்து கொண்டிருப்பார்கள்.
அப்படி சாதம் மீதமாகி விட்டால் அதனை குப்பையில் போடாமல் சுவையான பணியாரம் செய்யலாம்.
அந்த வகையில் மீதமான சாதத்தை வைத்து எப்படி சுவையான பணியாரம் எப்படி செய்வது என பதிவில் பார்க்கலாம்.
பணியாரம்
தேவையான பொருட்கள்
- சாதம்- 2 கப்
- ரவை- 1 கப்
- அரிசிமாவு- 2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம்- 2
- கேரட்- 2
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- தேவையான அளவு- எண்ணெய்
- உப்பு- தேவையான அளவு
- தண்ணீர்- 1 1/2 கப்
செய்முறை
முதலில் வெங்காயம், கேரட், கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
அவற்றை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 2 கப் சாதம் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைக்கலாம்.
அரைத்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் 1 கப் ரவை, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த கலவையை அப்படியே 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்.
பணியாரம் மா சரியான பதத்திற்கு மாறிய பின்னர் அந்த மாவை பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது பணியாரம் மா தயார்.
இதனை தொடர்ந்து அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் பணியாரம் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் போட்டு பொறித்து எடுக்கவும்.
பணியாரம் நன்கு வேகும்படி பிரட்டி பிரட்டி வேக வைத்து எடுக்கவும். இந்த முறையை சரியாக பின்பற்றினால் சுவையான பணியாரம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |