விலா எலும்பு முறிந்து காயங்களுடன் ஆதித்த கரிகாலன்! மருத்துவர்கள் கூறிய சோக செய்தி..
விலா எலும்பு முறிந்து காயங்களுடன் மருத்துவமனைக்கு சென்ற நடிகர் விக்ரமை மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாக மாறி நடிக்க கூடியவர் தான் நடிகர் சியான் விக்ரம்.
இவரின் சினிமா ஆர்வத்தை பார்க்கும் போது மெய்சிலிர்க்கும்.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான பிரமாண்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இதில் இவரின் நடிப்பு ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
மருத்துவர்கள் கூறிய ஆலோசனை
இந்த நிலையில் ஷீட்டிங் Action காட்சிகளில் துவங்கி விபத்தில் முடிந்துள்ளது.
அந்த விபத்தில் நடிகர் விக்ரமிற்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் சியான் விக்ரம் சுமார் 1 மாதம் சரி ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டார்கள்.
இந்த செய்தி தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனாலும் விக்ரம் மீண்டு வந்து விடுவார் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.