Wow... நியூ லுக்கில் நடிகர் விக்ரம் - வைரலாகும் புகைப்படம் - வாயடைத்த ரசிகர்கள்
நியூ லுக்கில் நடிகர் விக்ரமின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் கதாபாத்திரத்துக்காக தன்னுடைய உடலை வருத்தி, உருமாறி நடிப்பவர்.
சேது, காசி, அந்நியன், தெய்வத் திருமகள், ஐ, கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் இதனை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனைப் படைத்தது.
தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
மேலும், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தற்போது விக்ரம் தனது தோற்றத்தை மாற்றி நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் மேல் சட்டை அணியாமல் வேட்டியை கோவணம்போல் கட்டிக்கொண்டு கையில் ஆயுதம் ஏந்தி மிடுக்காக விக்ரம் வரும் காட்சிகளும், மக்களும் குதிரைகளும் பாய்ந்து ஓடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் விக்ரமின் புது லுக்கில் மாஸாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் அப்படியே வாயடைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Chiyaan Vikram New Stylish Look at Ponniyin Selvan Promotion 😎@chiyaan #ChiyaanVikram #Vikram #PonniyinSelvan2 #PonniyinSelvan1 #PS2 #PS #PonniyinSelvan pic.twitter.com/Dm52iKCzOe
— Natshathiram (@natshathiram) April 19, 2023
Vikram on his new looks.#vikram #chiyaan #chiyaanvikram #newtrends #Trending #redfm #redfmmalayalam pic.twitter.com/7RHVzwW9gn
— Red FM Malayalam (@RedFMMalayalam) April 19, 2023