விபத்தில் சிக்கிய நடிகர் அமிதாப் பச்சன்! எலும்பு உடைந்ததால் வலியால் துடித்த சோகம்
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியதால் எலுமபு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன்(80). இவ்வளவு பயதான போதும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது புராஜெக்ட் கே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
நாயகனாக பிரபாஸ் நடிக்கும் நிலையில் இவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் இதில் அமிதாப் பச்சனின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
அப்பொழுது திடீரென விபத்தில் சிக்கி விலா எலும்பு உடைந்ததாகவும், தசை கிழிந்து காயம் ஏற்பட்டுள்ளதாக அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.
பின்பு ஐதராபாத்தில் உள்ள ஏஜஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளாராம்.
வலி இருப்பதால் நடக்க கஷ்டமாக இருப்பதாகவும், இது குணமாக சில வாரங்கள் ஆகும் என்பதால் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.