விஜயகாந்த் மகன் திருமணம் நடக்காமல் போனது ஏன்?
மக்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வெள்ளிகிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது மகன் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த்
தேமுதிக கட்சியில் தலைவராகவும், எதிர் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்த விஜயகாந்த் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், இவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றுள்ளது.
பல லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சந்த பேழைக்குள் விதைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்களே பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் விஜயகாந்தின் மகன்களின் ஒருவராக விஜயபிரபாகரனுக்கு கடந்த 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கோவையே சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவுடன் நடைபெற்றது.
இவர்களின் திருமணமும் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது கேப்டன் உயிரிழந்துவிட்டதால் அவரது ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
நிச்சயதார்த்தம் முடிந்து 4 ஆண்டுகளாகியும் ஏன் திருமணம் நடைபெறவில்லை என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. இதற்கான பதில் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது விஜயகாந்த் தனது மகன் திருமணத்திற்கு மோடி தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அவருடைய நேரத்திற்கு காத்திருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
அதன் பின்பு விஜயகாந்திற்கும் உடல்நிலை பாதி்க்கப்பட்டதால் குறித்த பேச்சு அத்துடன் முடிந்துவிட்டது. குறித்த காரணம் தற்போது வெளியாகி பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |