தலைமுடி கருப்பாக மாற வேண்டுமா? மருதாணியுடன் இதை கலந்து தடவினால் போதும்
தலைமுடி கருப்பாக மாற வேண்டும் என்றால் மருதாணியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தலைமுடி பிரச்சினை என்பது இன்று பலருக்கும் ஏற்படும் நிலையில், பலவிதமான ஷாம்பு, எண்ணெய் என்று பலரும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
மருதாணியை எவ்வாறு பயன்படுத்துவது?
பல வைட்டமின்கள் நிறைந்த வாழைப்பழத்தினை, சிறிது வெதுவெதுப்பான தண்ணீருடன் வாழைப்பழ விழுதை கலந்து அதனுடன் மருதாணி பொடியை கலந்து பேஸ்ட் போன்று வைத்துக்கொண்டு தலைமுடிக்கு இயற்கையான பொலிவு கிடைக்கும்.
வெந்தய பொடி மற்றும் 3 அல்லது 4 ஸ்பூன் நெல்லிக்காய் தூளுடன் மருதாணி பேஸ்ட்டை கலந்து தலைமுடிக்கு தடவலாம்
எலுமிச்சை சாறுடன், மருதாணியை கலந்து முடிக்கு தேய்த்தால் நல்ல பலனை காணலாம்.
தயிருடன் மருதாணி பேஸ்ட்டை கலந்து தலைமுடிக்கு தேய்த்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
பொடுகு வராமல் தடுப்பதற்கு வெங்காய சாறுடன் மருதாணியை கலந்து தேய்த்தால் முடி கருப்பாக மாறுவதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |