பிரேமலதாவை பெண் பார்க்க காவி உடையில் வந்த விஜயகாந்த்... திருமணம் நடந்தது எப்படி?
கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலாதாவிற்கும் திருமணம் நடைபெற்ற போது நடந்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த்
தேமுதிக கட்சியில் தலைவராகவும், எதிர் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்த விஜயகாந்த் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், இவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றுள்ளது.
பல லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சந்த பேழைக்குள் விதைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்களே பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்திற்கும், பிரேமலதாவிற்கு 1990ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
திருமணம் குறித்து பிரேமலதா
இந்நிலையில் முன்னதாக பிரேமலதா அளித்திருந்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று கூறுவதற்கு தங்களது திருமணம் தான் சாட்சி என்றும் விஜயகாந்த் மதுரையை சேர்ந்தவர், நாங்கள் வேலூரை சேர்ந்தவர்கள்..
இருவருக்கு எந்தவொரு சம்மந்தம் இல்லை. என்னை பார்க்க வந்த போது எனது அப்பாவிற்கு பிடித்துவிட்டதுடன், இவருக்கு தான் மகளை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார்.
ஏனெனில் மிகவும் எளிமையாக விஜயகாந்த் வந்தார். காலில் செருப்பு இல்லாமல் காவி துணி அணிந்து வந்தார். அவர் சபரிமலைக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் உள்ளதால் அந்த உடையில் வந்திருந்தார்.
பிரபலங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், என்னவாக இருக்கும் என்று என் பெற்றோருக்கு தெரியாது. ஆனால், அவரை ஏற்கனவே எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டனர்" என்று பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |