விஜயை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த குழந்தை! உடனடியாக தளபதி கொடுத்த ஷாக்
நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்த குழந்தைக்கு வீடியோ கோல் செய்து நடிகர் விஜய் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழர்களின் தளபதி
தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக பலக் கோடி ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடித்த படங்கள் ஆரம்பக்காலத்தில் பெரியளவு வரவேற்பு இல்லாவிட்டாலும் காலங்கள் செல்ல செல்ல பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் சமிபத்தினங்களுக்கு முன்னர் குழந்தையொன்று அடம்பிடித்து வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது.
விஜய் செய்த நெகிழ்ச்சியான தருணம்
இதனை தொடர்ந்து இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், விஜய் அப்படி யாரையும் பார்க்க மாட்டார் எனவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது.
மாறாக விஜய் அவர்கள் குறித்து குழந்தைக்கு வீடியோ கோல் செய்து பேசியுள்ளார.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் விஜயின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.