பால் குடிப்பதற்கு அடம்பிடித்த குழந்தை... தந்தை செய்த காரியத்தைப் பாருங்க
குழந்தைகளின் சேட்டைகள் மற்றும் அவர்களின் குறும்புத்தனங்களை காட்டும் வீடியோக்கள் ஆன்லைனில் அடிக்கடி வைரலாவது வழக்கமான ஒன்று. கைக்குழந்தைகளை பார்த்து கொள்ளும் பெற்றோரின் கடமையும், பணியும் அவ்வளவு எளிதானதல்ல. அதிலும் குழந்தைகளுக்கு பால் புகட்டுவதும், அவர்களை சாப்பிட வைப்பதும் இருப்பதிலேயே மிகவும் கஷ்டமான வேலை. அப்படிப்பட்ட வேலையை ஒரு வித்தியாசமான ட்ரிக்கை பயன்படுத்தி தனது மகளுக்கு அதிகம் பாலூட்டுகிறார் ஒரு பாசக்கார தந்தை.
அந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. மியூசிக் புரொடியூசரான ரூடி வில்லிங்ஹாம் என்பவர், தன் மகளுக்கு பால்புகட்ட விரும்பினார். இதற்கு ஏற்ப ஒரு சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான ட்ரிக்கை கையில் எடுத்தார் அவர். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள குறுகிய வீடியோவில், முதலில் பாட்டிலில் பாலை பிடித்து கொள்கிறார்.
பின் தனது மகளுக்கு அருகே சென்று 'பீர் போங்' (Beer Bong) எனப்படும் புனல் போன்ற ஒரு சாதனத்தின் வாய் பகுதியில் முழு பாலையும் ஊற்றுகிறார். பீர் போங்கின் மறுமுனையில் குழந்தை பால் குடிப்பதற்கு ஏற்ற வகையில் சிலிகான் ஃபீடிங் பொருத்தப்பட்ட ஒரு பிளாஸ்டிக் குழாய் இணைக்கப்பட்டு உள்ளது. தனது மகளுக்கு ஃபார்முலா பாலைச் சேர்த்து, குடிக்க வைக்கும் பொருட்டு பீர் போங்கின் மற்றொரு முனையில் இந்த சிலிகான் ஃபீடிங்கை இணைத்து மாற்றியமைத்துள்ளார்.
இதன் மூலம் பாலின் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறார். புனலில் பாலை ஊற்றிவிட்டு பிளாஸ்டிக் குழாயையும் விடாமல் லாவகமாக மறு கையால் பிடித்து கொள்கிறார் ரூடி. பக்கத்தில் இருக்கும் அவரது மகள் அப்பா என்ன செய்கிறார் என்பதை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருக்கிறது.
பின்னர் தன் இடதுபக்க மடியில் மகளை அமர வைத்து, வலது கையில் உள்ள பீர் போங்கை சற்று உயர்த்தி பிடித்து கொண்டு மகளுக்கு பால் புகட்டுகிறார். தனக்கு பால் கொடுக்க தந்தை செய்யும் செயல்களால் தீவிரமாக ஈர்க்கப்பட்து குழந்தை. மேலும் தனது தந்தையின் இந்த வித்தியாசமான முயற்சியை வியந்து பார்த்தபடியே அழகாக பாலை குடிக்கிறது. இந்த ஐடியாவை கசிவு இல்லாமல், குழந்தைகள் விரைவாக மற்றும் அதிக பாலை குடிக்க வைக்க பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வைரலாகியுள்ளது. என் மகள் எடை குறைவாக இருப்பதால், சில புதிய உணவு நுட்பங்களை முயற்சிக்கிறோம். கல்லூரியில் எனக்காக வேலை செய்தேன், அவளுக்காகவும் வேலை செய்ய வேண்டும், இல்லையா? என்று கேட்டு இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார் ரூடி. இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.