நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் பிரதமர் மோடியிடம் மழலை மொழியில் சிறுமி புகார் க்யூட் வீடியோ..!
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி, நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதாக பிரதமர் மோடியிடம் புகார் அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
அதில், தனது ஆன்லைன் வகுப்பானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிவடைவதாகவும், ஆங்கிலம், கணிதம், உருது, ஈ.வி.எஸ் மற்றும் கணினி ஆகிய வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதாகவும் சிறுமி மழலை மொழியில் தெரிவிக்கிறார்.
சின்ன குழந்தைகளுக்கும் நிறைய வேலை இருக்கிறது என கூறும் அச்சிறுமி, குழந்தைகள் ஏன் இவ்வளவு சுமைகளை எதிர்கொள்ள வேண்டும்? என கேள்வி எழுப்பிவிட்டு, என்ன செய்ய முடியும் மோடி ஐயா, குட்பை என வீடியோவை முடிக்கிறார்.
A six-year-old Kashmiri girl's complaint to @PMOIndia @narendramodi regarding long hours of online classes and too much of school work. pic.twitter.com/S7P64ubc9H
— Aurangzeb Naqshbandi (@naqshzeb) May 29, 2021
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        