திருமணம் முடிந்தபின் விஜய் டிவி புகழ் வெளியிட்ட முதல் பதிவு ! என்ன சொல்லிருக்காரு?
திருமணம் முடிந்தபின் விஜய் டிவி புகழ் வெளியிட்ட முதல் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புகழ் அவரின் நீண்ட நாள் காதலியான பென்ஸ் ரியாவை நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார்.
இதனால் புதுமண தம்பதிகளான அவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து பலரும் பதிவிட்டு வந்தனர்.

தற்போது புகழ் அவரின் சமூக வலைதள பக்கமான டிவிட்டரில் திருமணம் குறித்து முதல்முறையாக பதிவிட்டு இருக்கிறார்.
அதில் “திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்!” என பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்??நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்!❤️ pic.twitter.com/qodfJHIbEl
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) September 2, 2022