ஒரு வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்த விஜய் டிவி புகழ்! இணையத்தில் கசிந்த புகைப்படம்;
விஜய் டிவியின் குக்விக் கோமாளி பிரபலமான புகழ் நேற்றைய தினத்தில் திடீரென திருமணம் செய்துகொண்டார்.
எதிர்பாராத இவரின் திருமணம் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன.
விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் இருக்கும் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் தான் அவர்களின் திருமணம் நடந்தது.
திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள். தாலிக்கட்டியவுடன் அன்பு பரிசாக தன் மனைவிக்கு நெகிழ்ச்சி முத்தம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறிய அனைவருக்கும் புகழ் நன்றியை தெரிவித்ததோடு திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே புகழ் - பென்சி ஆகியோருக்கு கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.