விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - உண்மையை உடைத்த பிரதீப் ஆண்டனி!
பிக்பாஸ் புகழ் நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவி பூஜா சக்தியை விவாகரத்து செய்யப்போவதாக முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நிதிப் பிரச்சினைகள் மற்றும் மனைவியிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால் ஏற்பட்ட மனக்கசப்பும் கோபமுமே அத்தகைய பதிவுக்குக் காரணம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

பிரதீப் ஆண்டனி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. ‘அருவி’, ‘வாழ்’, ‘டாடா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
இவர் தனது நீண்டகால காதலியான பூஜா சக்தியை கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

சென்னையில் எளிமையாக நடைபெற்ற இவர்களது திருமணம், இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த பிரதீப் ஆண்டனி, திடீரென தனது திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவாகரத்து செய்யப்போவதாக வெளியிட்ட பதிவு
சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியைப் பிரியப்போவதாக பிரதீப் ஆண்டனி வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில், குழந்தை பிறந்த பிறகு அதன் மீது மிகுந்த பாசம் ஏற்பட்டதாகவும், குழந்தையுடன் இருந்த நாட்கள் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பல மாதங்களாகக் குழந்தையைப் பார்க்க முடியாமல் இருப்பதாகவும், திருமண வாழ்க்கையில் பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

தனது திருமண வாழ்க்கை தன்னை மனதளவில் பாதித்துள்ளதாகவும், இனிமேல் அந்த உறவில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதால் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதுடன், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
விவாகரத்து முடிவுக்கான காரணம் என்ன?
இந்நிலையில், அண்மையில் தான் நடித்து வரும் வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதீப் ஆண்டனி, தனது விவாகரத்து பதிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது, பொதுவாகவே தனது உணர்வுகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துவது தனக்குப் பழக்கமான ஒன்று என்றும், அந்தச் சமயத்தில் நிதி ரீதியாகப் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடினமான சூழலில் தனது மனைவி தனக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவாக இருக்கவில்லை என்ற ஆதங்கமும் கோபமும் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே உணர்ச்சிவசப்பட்டு விவாகரத்து தொடர்பான பதிவை வெளியிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அந்தப் பதிவு எதிர்பாராத விதமாகப் பெரிய அளவில் பேசப்பட்டதாகவும், தற்போது நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது வேலை காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதீப் ஆண்டனி, ஒரு கட்டத்தில் மனைவியைப் பிரிந்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், தனது மனைவி பூஜா தன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாகவும், தன்னைப் பிரிந்து செல்ல அவர் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |