விஜய்காந்திற்கு மட்டுமல்ல விஜய்யிற்கும் இன்று விஷேட நாள் தான்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?
நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை கொண்டாடி வருகின்ற நிலையில், இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.
விஜய்-சங்கீதா ஜோடி
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்.
விஜய்யின் மனைவியான சங்கீதா விஜய் நடத்த பூவே உனக்காக என்றத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு விஜய்யை பார்த்தாக வேண்டும் என்று இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.
விஜய்யின் ரசிகராக வந்து அவரது வீட்டில் விருந்து சாப்பிட்டிருக்கிறார். ஆனால் விஜய்யின் அப்பாவிற்கு சங்கீதாவை பிடித்துப் போக இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தார்கள்.
அதன்படி 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.
மேலும், இவர்களுக்கு திருமணமாகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தற்போது வெளிநாட்டில் தங்கள் குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |