சிகிச்சையில் இருக்குமு் நடிகர் விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை என்ன? இயக்குனர் உடைத்த உண்மை
படப்பிடில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி நடிகர் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விரைவில் காணொளி மூலம் அனைவரிடமும் பேசுவார் என்று இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனி மற்றும் படத்தில் நடித்த நடிகைக்கு காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்பு நேற்றைய தினம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இவர் கண்விழிக்காமல், சுயநினைவை இழந்துவிட்டதாக பல தகவல்கள் வெளியே பரவி வருகின்றது. இந்நிலையில் இந்த பேச்சுக்கு இயக்குனர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இயக்குனர் கூறியது என்ன?
இயக்குனர் சுசீந்திரன் அறிக்கையில், "பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி 2 நாட்களுக்கு முன்னாடியே சென்னையில் அவரு வீட்டுக்கு வந்துட்டாரு.
2 வாரம் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொல்லிருக்காங்க, கூடிய சீக்கிரம் ரசிகர்கிட்ட வீடியோ மூலமா பேசுவாரு, ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம்,
விஜய் ஆண்டனி பற்றின தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுகிறேன்..." என்று தெரிவித்துள்ளார்.
[Y6SG4