விஜய்க்காக இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு அழைந்த தந்தை: என்னால் தான் விஜய் இந்த நிலைமையில் இருக்கிறான்!
நடிகர் விஜய்யை நான் இயக்கியதனால் தான் இன்று கமர்ஷியல் ஹீரோவாக மாறியிருக்கிறார் என விஜய்யின் தந்தை ஒபன் டோக் கொடுத்த செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். அதனாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

என்னதான் திரையில் பல ரசிகர்களைக் கொண்டு கொண்டாடி வந்தாலும் வீட்டில் எல்லோருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.
அவ்வாறு தான் நடிகர் விஜய்யிக்கும் அவரது தந்தைக்கும் பல பிரச்சினைகள் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவி வந்துக் கொண்டுதான் இருக்கிறது.
நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார். இதனால் அவரிடம் விஜய் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்றும் பேசப்பட்டு வருகின்றது.

யாரும் முன்வரவில்லை
ஆரம்பத்தின் என் மகனை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரை திரையில் அறிமுகப்படுத்த பல இயக்குனர்களிடம் வாய்ப்புக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
ஆனால் யாரும் விஜய்க்கு வாய்ப்புக் கொடுக்க முன்வரவில்லை. நான் முதன் முதலாக இயக்குனர் பாரதிராஜாவிடம் தான் என் மகனின் ஆல்பத்தை கொடுத்தேன்.

ஆனால் அவர் இதை ஏன் என்னிடம் கொடுக்கிறாய்... நீயும் ஒரு இயக்குனர் தானே நீயே அவனை வைத்து படம் இயக்கலாமே என்று கூறினார். ஆனால் அப்படி பல இயக்குனர்கள் சொன்னதும் நல்லது தான்.
ஏனேன்றால் விஜய்யை நான் இயக்கியதால் தான் தற்போது கமர்ஷியல் ஹீரோவாக மாறியிருக்கிறார் கடவுள் இதற்குத் தான் கடவுள் அப்படி செய்திருக்கிறார் போல என கூறியிருக்கிறார்.