வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் தந்தையை வரவேற்ற விஜய்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைரலாகும் வீடியோ!
சில பல பிரச்சினைகளால் தனது தந்தையுடன் பேசாமல் இருந்த விஜய் நேற்று இடம்பெற்ற வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் இருவரும் இணைந்துக்கொண்ட வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி, ராஷ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷியாம், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், படக்குழுவினர் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
சந்திரசேகர் - விஜய்
நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் விஜய் பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபட்டதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார்.
இதனால் அவரிடம் விஜய் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்றும் பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றால் போல சமீபத்தில் தன்னுடைய 80வது பிறந்தநாளை எஸ்.ஏ. சந்திரசேகர் கொண்டாடி இருந்தார்.
அதற்கு கூட விஜய் வரவில்லை என்றும், வாழ்த்து சொல்லவில்லை என்றும் ரசிகர்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
இசை வெளியீட்டு விழா இந்நிலையில், வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வந்த போது தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை கண்டதும் அவரை கட்டி அணைத்து ஆரத்தழுவி இருக்கிறார்.
When #ThalapathyVijay greets Shoba ma & hugs SAC ?♥️ #SoulOfVarisu #VarisuAudioLaunch #Varisu #Thalapathy67pic.twitter.com/ozGx06rqkI
— OTVF™ (@otvfofficial) December 24, 2022
இவர்களின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
